எலெக்ட்ரீசியன் தற்கொலை
பொள்ளாச்சி அருகே எலெக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்டார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள தென்சங்கம்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 33), எலெக்ட்ரீசியன். இவருடைய மனைவி தேவி (32). இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், மணிகண்டன் அடிக்கடி மது அருந்திவிட்டு, மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட தகராறால், தேவி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மணிகண்டன், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும் அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.