பழுதடைந்த மின்சாதன பொருட்களை சீரமைத்த மின்ஊழியர்கள்


பழுதடைந்த மின்சாதன பொருட்களை சீரமைத்த மின்ஊழியர்கள்
x
தினத்தந்தி 11 Aug 2023 12:15 AM IST (Updated: 11 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடும் மழையையும் பொருட்படுத்தாமல் பழுதடைந்த மின்சாதன பொருட்களை சீரமைத்த மின்ஊழியர்கள்

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காடு மற்றும் பூம்புகார் பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது வீசிய பலத்த காற்றால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மேலும் வெள்ளகுளம், திருக்காட்டுப்பள்ளி, மணி கிராமம், பெருந்தோட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் வினியோகம் செய்யும் சாதனங்கள் வெடித்து சிதறின. இதனால் மேற்கண்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. இதையடுத்து சீர்காழி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயபாரதி மேற்பார்வையில், உதவி பொறியாளர்கள் திருவெண்காடு ரமேஷ், பூம்புகார் தினேஷ் ஆகியோர் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் கடும் மழையையும் பொருட்படுத்தாமல், பழுதடைந்த மின் சாதனங்களுக்கு பதிலாக புதிய மின் சாதனங்களை பொருத்தி மேற்கண்ட பகுதிகளுக்கு மின்வினியோகம் கிடைத்திட ஏற்பாடு செய்தனர். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கும், மின்ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.


Next Story