இன்று மின்சாரம் நிறுத்தம்
பாகலூர், பேரிகை பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
ஓசூர்
ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓசூர் கோட்டம் பாகலூர் மற்றும் நாரிகானபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாகலூர், ஜீமங்கலம், உளியாளம், பெலத்தூர், தின்னப்பள்ளி, நல்லூர், சூடாபுரம், அலசப்பள்ளி, பி.முதுகானப்பள்ளி, தேவீரபள்ளி, சத்தியமங்கலம், தும்மனபள்ளி, படுதேபள்ளி, பலவனப்பள்ளி, முத்தாலி, முதுகுறுக்கி, கொத்தபள்ளி, வானமங்கலம், சிச்சிருகானபள்ளி, நாரிகானபுரம், பேரிகை, அத்திமுகம், ஏ.செட்டிப்பள்ளி, நரசாப்பள்ளி, பன்னப்பள்ளி, சீக்கனபள்ளி, நெரிகம், கூல்கெஜலன்தொட்டி, தண்ணீர் குண்டலபள்ளி, எலுவப்பள்ளி, கே.என்.தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.