நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 8 Feb 2023 12:15 AM IST (Updated: 8 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர், சூளகிரி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி, ஓசூர் மின்சார வாரிய செயற்பொறியாளர்கள் முத்துசாமி, கிருபானந்தம் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சூளகிரி, காமன்தொட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் சூளகிரி நகரம், உலகம், மாதரசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சுண்டகிரி, சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, காளிங்கவரம், சிம்பில்திராடி, காமன்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாத்தகொட்டாய், எர்ரண்டப்பள்ளி, பேடப்பள்ளி, சென்னப்பள்ளி, மேடுப்பள்ளி, செம்பரசனப்பள்ளி, போடூர், திருமலைகோட்டா, அட்டகுறுக்கி, கோபசந்திரம், தியாரசனப்பள்ளி, ஏ.செட்டிப்பள்ளி, பங்காநத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இதேபோன்று ஓசூர் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் ஓசூர் காமராஜ் காலனி, எம்.ஜி.ரோடு, அண்ணாநகர், ராம் நகர், நியூ ஹட்கோ, ஸ்ரீநகர், பாகலூர் ஹட்கோ, ஆசிரியர் காலனி, என்.ஜி.ஜி.ஓ.காலனி, அப்பாவு நகர், துவாரகா, முனீஸ்வர் நகர், மத்தம், ஆனந்த நகர், சாந்தபுரம், அரசனட்டி, சூர்யா நகர், பிருந்தாவன் நகர், அண்ணாமலை நகர், கிருஷ்ணா நகர், டைட்டான் இன்டஸ்ட்ரிஸ், அசோக் லேலண்ட்-1, சிப்கார் ஹவுசிங் காலனி (பகுதி நேதாஜி நகர், பாலாஜி நகர் (சின்ன எலசகிரி), டி.வி.எஸ்.நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டான் டவுன்ஷிப், காடிபாளையம், குதிரே பாளையம், பழைய மத்திகிரி, எடையநல்லூர், சிவகுமார் நகர், கொத்தூர் கொத்தகொண்டபள்ளி, பொம்மாண்டபள்ளி மற்றும் சுற்றுவட்டாரங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story