தொழிற்சங்கங்ளுக்கு விரைவில் தேர்தல் நடத்த மின்சார வாரியம் உத்தரவு


தொழிற்சங்கங்ளுக்கு விரைவில் தேர்தல் நடத்த மின்சார வாரியம் உத்தரவு
x

மின்வாரியத்தில் தொழிற்சங்கங்களின் தலையீட்டைத் தடுக்கும் விதமாக தொழிற்சங்க தேர்தலை நடத்த வேண்டும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் மின்சார வாரியத்தில் தொழிற்சங்கங்களின் தலையீடு இருப்பதாகவும், தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கும், ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு காணவும் சிக்கல்கள் இருப்பதாக புகார்கள் எழுந்தன.

இதற்கு தீர்வு காணும் விதமாக அதிக அளவிலான உறுப்பினர்களைக் கொண்ட தொழிற்சங்கங்களை மட்டுமே அங்கீகரிக்க மின்சார வாரியம் முடிவெடுத்துள்ளது. அதற்காக விரைவில் தேர்தல் நடத்துமாறு தொழிற்சங்கங்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தேர்தலில் 15% தொழிலாளர்களின் வாக்குகளை பெரும் சங்கத்திற்கு மட்டுமே பிரதிநிதித்துவம் வழங்கப்படும் எனவும், 15%க்கு குறைவாக வாக்குகளை பெறக்கூடிய தொழிற்சங்கங்களை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story