ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரிமின்வாரிய சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் போராட்டம்


ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரிமின்வாரிய சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் போராட்டம்
x
தினத்தந்தி 5 July 2023 12:15 AM IST (Updated: 5 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களில் ஒப்பந்த ஊழியர்களை நியமித்து தினக்கூலி வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும், தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) சார்பில் நேற்று மாநிலம் தழுவிய அளவில் தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு மாவட்ட கலெக்டர் மூலம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். அருள், வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முத்துக்குமரன், செயலாளர் மூர்த்தி, பொருளாளர் பாலகிருஷ்ணன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்ட செயலாளர் சேகர், சிறப்பு தலைவர் சிவசங்கரன், துணைத்தலைவர் புருஷோத்தமன் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். இதில் திட்ட துணைத்தலைவர் குணசேகர், துணை செயலாளர்கள் நிஷாந்தி, கன்னியப்பன், ஏழுமலை, சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கார்த்திகேயன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அவர்கள், மாவட்ட கலெக்டர் மூலம் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு கொடுத்தனர்.


Next Story