எல்லீஸ்நகர் பகுதியில் நாளை மின்சார நிறுத்தம்


எல்லீஸ்நகர் பகுதியில் நாளை மின்சார நிறுத்தம்
x

எல்லீஸ்நகர் பகுதியில் நாளை மின்சார நிறுத்தம்

மதுரை

மதுரை

மதுரை ஆனையூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. எனவே இந்த மின்நிலையத்திற்குட்பட்ட பாலமேடு மெயின் ரோடு, சொக்கலிங்க நகர் 1-வது தெரு முதல் 7-வது தெரு வரை, பெரியார் நகர், அசோக் நகர், புதுவிளாங்குடி, கூடல் நகர், ஆர்.எம்.எஸ். காலனி, சொக்கநாதபுரம், ராஜ்நகர், பாத்திமாகல்லூரி, பழைய விளாங்குடி, சக்தி நகர், விஸ்தார குடியிருப்பு, பரவை சந்தை, கரிசல்குளம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில் பாப்பாகுடி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் பழனி தெரிவித்தார். மேலும் அரசரடி துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அரசரடிக்கு உட்பட்ட எல்லீஸ்நகர் ெமயின்ரோடு, கென்னட் கிராஸ்ேராடு, கென்னட் ஹாஸ்பிடல் ரோடு, மகபூப்பாளையம், அன்சாரி நகர். டி.பி. ரோடு, ெரயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள்,, பைபாஸ் ரோடு, பழங்காநத்தம் ரவுண்டானா, ஆண்டாள் புரம், பெரியார் பஸ் நிலையம், ஆர்.எம்.எஸ்.ரோடு, காக்காதோப்பு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் மோகன் தெரிவித்தார்


Next Story