மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும்
மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் எனஎஇறால் வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவெண்காடு:
தமிழக இறால் வளர்போர் சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் சீர்காழியில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் அலிஉசேன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பாண்டி பாலா, மாநில பொருளாளர் கிரி, மாநில துணைத்தலைவர் பூம்புகார் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பேராசிரியர் ஜெயராமன் வரவேற்றார். இறால் வளர்ப்பு தொழிலுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். இறால் வளர்ப்பு தொழிலுக்கு உரிமம் கேட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாக உரிமம் வழங்க வேண்டும். இறால் வளர்க்கும் உரிமையாளர்களுக்கு அரசு தரமான இறால் குஞ்சுகளை வழங்க வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பட்டியலில் இருந்து இறால் தொழிலை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் நாராயணசாமி, நிர்வாகிகள் ஞானம், அரவிந்தன், சாய் பாஸ்கரன், கார்த்திகேயன், அக்பர், சேகர் மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் பூம்புகார் ராஜ்குமார் நன்றி கூறினார்.