சமத்துவபுரம் பகுதியில் மின்வசதி செய்து தர வேண்டும்
சமத்துவபுரம் பகுதியில் மின்வசதி செய்து தர வேண்டும்
ஆலக்குமுளை ஊராட்சி சமத்துவபுரம் பகுதியில் மின்வசதி செய்து தர வேண்டும் என்று பூம்பூம் மாட்டுக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூம்பூம் மாட்டுக்காரர்கள்
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலடிக்குமுளை ஊராட்சியில் சமத்துவபுரம் அமைந்துள்ளது.
இந்த சமத்துவபுரம் பின் பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பூம்பூம் மாட்டுக்காரர்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் பல காலமாக சாதி சான்றிதழ் இல்லாமல் இருந்தனர்.
இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் சூர்யா புகழேந்தி முயற்சியில் பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு சாதி சான்றிதழை அப்போது இருந்த தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று வழங்கினார்.
மின்வசதி செய்து தர வேண்டும்
இந்த பகுதியில் மின்சார வசதி இல்லாததால் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் தங்களது குழந்தைகள் வெளிச்சம் இல்லாமல் மண்எண்ணெய் விளக்கு வைத்து படிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் தங்களது குழந்தைகள் படிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே சமத்துவபுரம் பகுதியில் மின்வசதி செய்து தர வேண்டும் என்று பூம்பூம்மாட்டுக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.