சென்னையில் மீண்டும் மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது - மின்வாரியம்


சென்னையில் மீண்டும் மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது - மின்வாரியம்
x

மழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் பாதுகாப்பு கருதி மின்வினியோகம் நிறுத்தப்பட்டிருந்தது

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை வெளுத்து வாங்குகிறது. நேற்று இரவு முதல் விடாமல் பெய்யும் கனமழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் சென்னை மாநகரம் முழுவதுமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இதனிடையே சென்னையில் இன்று காலை முதல் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

தண்ணீர் அதிக அளவில் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் தடுக்க மின் விநியோகம் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. மழை வெள்ளத்துக்கு இடையே மின்சாரமும் நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர். இந்த நிலையில், சென்னையில் நிறுத்தப்பட்ட மின் விநியோகம் மீண்டும் தொடங்கியுள்ளது. மழை குறைந்த பகுதிகளில் மீண்டும் மின் வினியோகம் தொடங்கியுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.


Next Story