மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்
மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்
காங்கயம்
காங்கயம் அடுத்துள்ள ஆலாம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ராமசாமி நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 5 நாட்களாக மின் விநியோகம் பாதிப்பு.மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.காங்கயம் நகர் பகுதி அருகே உள்ளது ராமசாமி நகர் ஆலாம்பாடி ஊராட்சிக்கு உட்பட்டது.
இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கு குடியிருக்கும் பொதுமக்கள் நெசவுத் தொழிலையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இந்த ராமசாமி நகர் பகுதியில் கடந்த 2 வருடங்களாக மின்சாரம் சரிவர வழங்கப்படாமல் இருந்து வந்ததாக புகார் தெரிவிக்கின்றனர். மும்முனை மின்சாரம் இல்லை எனவும் ஒருமுனை மின்சாரம் மட்டுமே வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மழை பெய்துள்ளது. அப்போது இடி இடித்து உள்ளது இதில் அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி) பழுதடைந்துள்ளது. இதனால் ராமசாமி நகர் பகுதியில் உள்ள மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.இதனால் அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் காங்கயம் பழையகோட்டை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் நகர் பகுதிக்கு அருகே உள்ள ராமசாமி நகரில் கடந்த 5 நாட்களாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் இருந்து வந்த நிலையில் மின்வாரிய அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.