மின்கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்-இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம்


மின்கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்-இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம்
x

மின்கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுக்கோட்டை

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ''மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக மத்திய அரசின் அணுகுமுறை இருக்கிறது. இந்துக்கள் பற்றி தி.மு.க. எம்.பி. ஆ.ராசா கூறிய கருத்துக்கள் அவரது சொந்த கருத்தில்லை. ஆனால் இந்து மதத்திற்கு எதிராக பேசினார் என தமிழகத்தில் கலவரத்தை தூண்ட சிலர் ஈடுபடுகின்றனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் உள்பட நிர்வாகிகள் வீட்டில் தேசிய புலனாய்வு நடத்திய சோதனை பற்றி வெளிப்படையாக சொல்ல வேண்டும். அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பற்றி தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் பா.ஜனதா கட்சியை வளர்க்க முயற்சி மேற்கொள்கின்றனர். ஆனால் அவர்கள் நினைப்பதை போல் கட்சி வளர வாய்ப்பு இல்லை'' என்றார். முன்னதாக கட்சி அலுவலகத்தில் மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட செயலாளர் செங்கோடன் வேலை அறிக்கை குறித்து பேசினார். திருமண உதவித்தொகைக்கான மனுக்களை பரிசீலித்து உதவித்தொகை வழங்க வேண்டும். மின்கட்டண உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாத, மாதம் மின் கணக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story