2 ஆண்டுகளுக்கு மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது தென்னை சார் பொருட்கள் உற்பத்தியாளர் சங்கத்தினரகோரிக்கை


2 ஆண்டுகளுக்கு மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது  தென்னை சார் பொருட்கள் உற்பத்தியாளர் சங்கத்தினரகோரிக்கை
x

2 ஆண்டுகளுக்கு மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று தென்னை சார் பொருட்கள் உற்பத்தியாளர் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு

ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட தென்னை சார் பொருட்கள் உற்பத்தியாளர் சங்க தலைவர் தனசேகரன் தலைமையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஈரோடு தபால் நிலையத்தில் இருந்து கடிதம் அனுப்பினர். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-

மின் நுகர்வோருக்கான நிலை கட்டணம், ஒரே பிரிவில் பழைய கட்டணமான, ரூ.35-க்கு மாற்றி அமைக்க வேண்டும். மின் நுகர்வோர்களுக்கு, 'பீக் ஹவர் சார்ஜ்'-யை உடனடியாக திரும்ப பெற வேண்டும். மின்வாரிய வழிகாட்டுதலில் ஏற்கனவே உள்ள 'எல்.டி-3 ஏ1' கட்டணத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மேற்கூரை சோலார் நெட்வொர்க் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் இன்றைய சூழலை கருத்தில் கொண்டு 2 ஆண்டுகளுக்கு மின்சாரம் மற்றும் இதர கட்டணங்கள் உயர்த்துவதை தமிழக அரசு தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Related Tags :
Next Story