ஆவடி மாநகராட்சியில் ரூ.1.35 கோடியில் 6 இடங்களில் மின்சார டிரான்ஸ்பார்மர் பேனல்


ஆவடி மாநகராட்சியில் ரூ.1.35 கோடியில் 6 இடங்களில் மின்சார டிரான்ஸ்பார்மர் பேனல்
x

ஆவடி மாநகராட்சியில் ரூ.1.35 கோடியில் 6 இடங்களில் மின்சார டிரான்ஸ்பார்மர் பேனல்களை அமைச்சர் நாசர் தொடங்கிவைத்தார்.

சென்னை

சென்னைக்கு அடுத்தபடியாக ஆவடி மாநகராட்சியில் பூமிக்கு அடியில் கேபிள் மூலம் மின்சாரம் அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 13 பேனல்கள் மற்றும் ஆவடி காமராஜர் நகர் பகுதியில் 15 பேனல்கள் என மின்வாரியம் சார்பாக 6 இடங்களில் ரூ.1 கோடி 35 லட்சம் செலவில் மின்சார வளைய சுற்றுதர அமைப்புடன் கூடிய 28 மின்சார டிரான்ஸ்பார்மர் பேனல் (ரிங் மெயின் யூனிட்) அமைக்கப்பட்டுள்ளது.

இதனை தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தொடங்கிவைத்தார். அவருடன் ஆவடி மின்வாரிய செயற்பொறியாளர் அருணாச்சலம், உதவி பொறியாளர்கள் செந்தில்குமார், முருகன், ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார் மற்றும் கவுன்சிலர்கள், கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

இதற்கு முன்பு மின் கம்பத்தில் இணைக்கப்பட்டிருந்த டிரான்ஸ்பார்மர் பழுதானால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்படும். அதை சரி செய்யும் வரை பல மணிநேரம் அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டு இருக்கும். இதனால் பொதுமக்கள் அதிக சிரமத்துக்கு உள்ளானார்கள். ஆனால் தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த பேனல் மூலம் ஒரு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மறுபகுதியில் இருந்து மின்சாரம் கொடுக்கப்பட்டு மின்சாரம் பழுது ஏற்பட்ட இடம் துல்லியமாக கண்டறிந்து அதை சரி செய்ய முடியும். மேலும் பொது மக்களுக்கும் மின்சாரம் நீண்டநேரம் தடைபடாமல் உடனடியாக மின்சாரம் கொடுக்க இயலும். இந்த திட்டம் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


Next Story