விழுப்புரம் அருகேசாலை விபத்தில் மின்வாரிய ஊழியர் சாவு


விழுப்புரம் அருகேசாலை விபத்தில் மின்வாரிய ஊழியர் சாவு
x
தினத்தந்தி 19 July 2023 12:15 AM IST (Updated: 19 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே சாலை விபத்தில் மின்வாரிய ஊழியர் உயிரிழந்தாா்.

விழுப்புரம்


விழுப்புரம் அருகே உள்ள மல்ராஜன்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் புகழேந்தி (வயது 53). இவர் ராம்பாக்கத்தில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மீட்டர் கணக்கீட்டாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் புகழேந்தி, தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் பணிக்கு புறப்பட்டார். பக்கமேட்டுபாதை மின்வாரிய அலுவலக சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த புகழேந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புகழேந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story