பெண்ணாடம் அருகே சாலை விபத்தில் மின்வாரிய தொழிலாளி சாவு
பெண்ணாடம் அருகே நடந்த சாலை விபத்தில் மின்வாரிய தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் அடுத்த திருமலை அகரம் கிராமத்தை் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சத்யராஜ் (வயது 37). இவர் பெண்ணாடம் துணை மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணி செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இவரது மனைவி நந்திமங்கலத்தில் உள்ள தாய் வீட்டில் உள்ளார். அங்கு நேற்று முன்தினம் சென்ற சத்யராஜ், பின்னர் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். அப்போது, நந்தி மங்கலத்தில் இருந்து அகரம் செல்லும் சாலையில் வரும்போது அங்குள்ள பள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.இதில் தலையில் பலத்த அடிபட்ட சத்யராஜ் சம்பவ இடத்திலேேய இறந்து போனார். இது குறித்து தகவல் அறிந்த பெண்ணாடம் போலீசார் சத்யராஜின் உடலை கைப்பற்றி திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சத்யராஜியின் மனைவி உமாபாரதி (25) கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.