மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பெரம்பலூர் வட்ட கிளை சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் வட்ட கிளையின் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மின் ஊழியர்கள் ஊதிய உயர்வு நிலுவை தொகையினை உடனடியாக வழங்கிட வேண்டும். பல மாதங்களாக வழங்காமல் உள்ள இரட்டிப்பு ஊதியம், பொது வருங்கால வைப்பு நிதி முன் பணக்கடன் உள்ளிட்ட பணப்பயன்களை உடனே வழங்கிட வேண்டும். காலிப்பணிடங்களை நிரப்பிட வேண்டும். இ-டெண்டர் முறையை ரத்து செய்திட வேண்டும். ஏற்கனவே உள்ள மின் இணைப்புகளுக்கு டோட்டெக்ஸ் முறையில் ஸ்மார்ட் மீட்டர் வைக்கும் திட்டத்துக்கு டெண்டர் அறிவிக்க உள்ளதை கைவிட வேண்டும். 1.12.2019 அன்று பணியில் இருந்த பகுதி நேர பணியாளர்கள் அனைவருக்கும் 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். 1.12.2019-க்கு பின்பும், 16.05.2023-க்கும் முன்பும் பணியில் சேர்ந்தவர்களுக்கும், கேங்மேன் மற்றும் வாரிசு பணியில் சேர்ந்தவர்களுக்கும் 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசும், மின் வாரியமும் நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

1 More update

Next Story