மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோவை டாடாபாத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கோவை
மின்வாரியத்தில் காலியாக உள்ள 50 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோவை டாடாபாத்தில் உள்ள மண்டல மின்வாரிய பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற நிர்வாகிகள் கூறியதாவது:-
நாட்டிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் அரசு அறிவித்த உடனே மிக குறுகிய காலத்தில் விவசாயத்திற்கு 1 லட்சம் மின் இணைப்பு வழங்கி உள்ளோம்.
மின்வாரியத்தில் 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ள போதிலும் இந்த இலக்கை விரைந்து எட்டி பிடித்து உள்ளோம். தற்போது போக்குவரத்து துறையில் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடங்கி முதல் கட்ட நடவடிக்கை முடிந்து உள்ளது.
எனவே மின் துறையிலும் 1.12.2009 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து தொழிற்சங்கங்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
கேங்மேன் பயிற்சி பணியாளர்களுக்கு அடிப்படை சம்பளமும், நிரந்தர ஊழியர்க ளுக்கு உண்டான அனைத்து சலுகைகளையும் வழங்கிட வேண்டும்
இவ்வாறு அவர்கள் கூறினர்.