மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

மின்வாரியத்தில் காலியாக உள்ள 56 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி திருச்சி பெருநகர வட்டக்கிளை சார்பில் மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வராசு, பொருளாளர் பழனியாண்டி, மாநில துணை பொதுச்செயலாளர் இருதயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் திருச்சி, லால்குடி, மணப்பாறை உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான மின்ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். முடிவில் கிழக்கு கோட்ட செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார்.


Next Story