மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் சார்பில் பாளையங்கோட்டை தியாகராஜநகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின் துறையை பொது துறையாக பாதுகாத்திட வேண்டும். 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட பஞ்சபடியை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சி.ஐ.டி.யு. மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்ட தலைவர் பீர்முகம்மது ஷா தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் செண்பகம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். கோரிக்கைகளை விளக்கி செயலாளர் கந்தசாமி, பொருளாளர் நாகையன், துணை தலைவர் பூலுடையார், துணை செயலாளர் பச்சையப்பன், துணை தலைவர் தளபதி ஆகியோர் பேசினார். மின் ஊழியர் மத்திய அமைப்பு செயலாளர் வண்ணமுத்து நன்றி கூறினார். இதில் பலர் கலந்து கொண்டனர்.