மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட மின்வாரிய தலைமை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு திட்ட பொருளாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் அருள், திட்ட துணைத்தலைவர் புருஷோத்தமன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு, தொழிற்சங்கத்தை மதிக்காமல் தன்னிச்சையாக போனஸ் அறிவித்துள்ளதை கண்டித்து கோஷம் எழுப்பி பேசினர். இதில் மின்வாரிய ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story