மின்சார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மின்சார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2022 7:45 PM GMT (Updated: 2022-11-24T01:16:09+05:30)

மின்சார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தர்மபுரி

மின்சார சட்ட திருத்த மசோதா 2022-ஐ கைவிடக் கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் தர்மபுரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் துணைத் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். இணை செயலாளர்கள் ஜெகநாதன், காளியப்பன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்ட செயலாளர் லெனின் மகேந்திரன், மாநில துணைத்தலைவர் ஜீவா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது‌ மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிட கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. திட்ட பொருளாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.


Next Story