மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்
மின் ஊழியர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை குழுவில் 60 ஆண்டுகளாக இல்லாத புதிய நடைமுறையாக தமிழக அரசு சார்பாக 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்ததை கண்டித்து தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் பெரம்பலூர் கிளையின் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மின் வாரியத்தின் பெரம்பலூர் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட மின் ஊழியர்கள், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை குழுவில் நியமனம் செய்யப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story