மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பின் பெரம்பலூர் வட்ட கிளை சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் திருச்சி மண்டல செயலாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். வட்ட கிளை செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மின்வாரிய ஊழியர்கள் 8 மணி நேர வேலை உரிமையை பறிக்கும் 1948-ம் ஆண்டு தொழிற்சாலை சட்ட திருத்த மசோதாவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். முதலாளிகளின் நலன் காக்கும் மத்திய அரசின் பின்னால் தமிழக அரசு செல்லக்கூடாது என்று கோஷங்களை எழுப்பினர். 75 ஆண்டு காலமாக தொழிலாளர்கள் பெற்று வந்த மிகை நேர ஊதியம், ஈடுகட்டும் விடுப்பு, பணி நேரத்தில் ஓய்வு போன்ற அடிப்படை உரிமைகளை பறித்து முதலாளிகளிடம் ஒப்படைத்து தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது, என்று கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.


Next Story