மின் ஒயர் மீது தென்னை மரக்கிளை விழுந்ததால் மின்தடை
கண்ணமங்கலம் பகுதியில் பரவலாக மழை பெய்த நிலையில் தென்னை மரக்கிளை மின் ஒயர் மீது விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.
திருவண்ணாமலை
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் பகுதியில் பரவலாக மழை பெய்த நிலையில் தென்னை மரக்கிளை மின் ஒயர் மீது விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.
கண்ணமங்கலம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மழை விடிய விடிய பெய்தது. மழை காரணமாக கண்ணமங்கலம் ஏரிக்கு அருகே வயல்வெளியில் உள்ள பிடாரியம்மன் கோயில் பகுதியில் தென்னை மரக்கிளை அப்பகுதியில் செல்லும் மின் ஒயர்கள் மீது விழுந்தது. இதனால் கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் மின் தடை ஏற்பட்டது.
இந்த மின் தடையால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
Next Story