மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தச்சூருக்கு கொண்டு வரப்பட்டன


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தச்சூருக்கு கொண்டு வரப்பட்டன
x
தினத்தந்தி 20 May 2023 12:15 AM IST (Updated: 20 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தச்சூருக்கு கொண்டு வரப்பட்டன

கள்ளக்குறிச்சி

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சி தொகுதிக்கு பயன்படுத்தக்கூடிய 1000 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், பெங்களூரு பெல் நிறுவனத்தில் இருந்து லாரியில் போலீஸ் பாதுகாப்புடன் தச்சூருக்கு கொண்டு வரப்பட்டது. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஷ்ரவன்குமார் ஆய்வு செய்தார். தொடா்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தச்சூரில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டு, அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அப்போது கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா, தனிதாசில்தார் (தேர்தல்) சையது காதர், தனிதாசில்தார் (ஆதிதிராவிடர் நலம்) பாலகுரு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story