கரும்பு தொட்டில் தூக்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
கரும்பு தொட்டில் தூக்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
சிங்கம்புணரி
சிங்கம்புணரியில் உள்ள கூத்தாடி அம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா 10 நாட்கள் நடைபெற்றது. விழா முதல் நிகழ்ச்சியாக கூத்தாடி அம்மன் கோவில் தெரு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டு எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து கூத்தாடி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து காப்பு கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை பால்குட விழா நடைபெற்றது. 500-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக கரும்புத் தொட்டில் தூக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டியும் குழந்தைகள் நலம் வேண்டியும் தங்கள் குழந்தைகளை தொட்டிலில் வைத்து கரும்பில் கட்டி தூக்கி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.. விழாவிற்கான ஏற்பாடுகளை கூத்தாடி அம்மன் கோவில் தெரு மக்கள் மற்றும் இளைஞர் குழுவினர் செய்திருந்தனர்.