தாளவாடி அருேக கும்கி யானையை காண குவிந்த பொதுமக்கள்
தாளவாடி அருேக கும்கி யானையை காண குவிந்த பொதுமக்கள்
தாளவாடி
தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட இரிபுரம், தொட்டகாஜனூர், தர்மாபுரம் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி மக்களை தாக்கி கொன்றதுடன், விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி கருப்பன் என்ற காட்டு யானை அட்டகாசம் செய்து வந்தது. இதைத்தொடர்ந்து அந்த யானையை கட்டுபடுத்த பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பத்தில் இருந்து சின்னதம்பி மற்றும் ராஜவர்தன் என்ற 2 கும்கி யானைகள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தாளவாடியை அடுத்த இரிபுரம் பகுதிக்கு கொண்டுவரபட்டது.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கும்கி யானைகளை பார்க்க தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் இரிபுரத்தில் குவிந்தனர். பின்னர் அவர்கள் 2 கும்கி யானைகளையும் பார்த்து புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இதையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வனத்துறையினர், அங்கு குவிந்த பொதுமக்களை கும்கி யானைகள் அருகில் அனுமதிக்கவில்லை.