சோலார் மின்கம்பத்தை சேதப்படுத்திய யானை


சோலார் மின்கம்பத்தை சேதப்படுத்திய யானை
x

சோலார் மின்கம்பத்தை யானை சேதப்படுத்தியது.

கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி அருகே உள்ள சிகரளப்பள்ளி வனப்பகுதியில் 3 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதில் ஒரு யானை தனியாகவும், மற்ற 2 யானைகள் சேர்ந்தும் சுற்றி வருகின்றன. இந்த யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறை சார்பில் சோலார் மின் கம்பங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் ஒற்றை காட்டு யானை சிகரளப்பள்ளி அருகே அமைக்கப்பட்ட 6 சோலார் மின் கம்பங்களை சேதப்படுத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர், சேதமான மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story