பாப்பாரப்பட்டி அருகே யானை தாக்கி முதியவர் படுகாயம்-ஜி.கே.மணி எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல்


பாப்பாரப்பட்டி அருகே யானை தாக்கி முதியவர் படுகாயம்-ஜி.கே.மணி எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல்
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே உள்ள கூக்குட்டமரதஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 80). இவர் நேற்று அதிகாலை துளசிப்பள்ளம் ஏரிக்கு அருகில் உள்ள தனது நிலத்தில் குடிசையில் கட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காட்டு யானைகள் வந்தன. அதில் ஒரு யானை மாணிக்கம் குடிசையை பிய்த்து எறிந்தது. மேலும் கட்டிலில் படுத்திருந்த மாணிக்கத்தை தாக்கி, தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து காட்டு யானைகள் அங்கிருந்து கிட்டம்பட்டி கிராமத்துக்குள் புகுந்தன. படுகாயம் அடைந்த மாணிக்கத்தை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணிக்கத்தை பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அப்போது பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பாலசுப்ரமணியம், பா.ம.க. மாவட்ட துணை செயலாளர் கே.ஜி.மாதையன், மாநில செயற்குழு உறுப்பினர் சேகர், நகர செயலாளர் ராஜசேகர், மாவட்ட துணைத் தலைவர் ராஜா, மாவட்ட தலைவர் செல்வகுமார், முன்னாள் நகர தலைவர் ராஜவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story