யானைகள் முகாமை முறையாக பராமரிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


யானைகள் முகாமை முறையாக பராமரிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x

யானைகள் முகாமை முறையாக பராமரிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

பெரம்பலூர், எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையம் முறையாக பராமரிக்காததால் அடுத்தடுத்து யானைகள் மரணமடைந்து வருவதாக சென்னை ஐகோர்ட்டில் முரளிதரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தை நேரில் ஆய்வு செய்த வனத்துறை அதிகாரி சுஜாதா அளித்த அறிக்கையை தமிழ்நாடு அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

இதை படித்து பார்த்த நீதிபதிகள், வனத்துறை அதிகாரி சுஜாதா அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் உரிய வசதிகளை விரைந்து ஏற்படுத்திக் கொடுத்து, முறையாக பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். விசாரணையை ஒரு மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.


Next Story
  • chat