கிராமத்திற்குள் புகுந்த யானைகள்


கிராமத்திற்குள் புகுந்த யானைகள்
x

தேன்கனிகோட்டை அருகே ஊருக்குள் புகுந்த யானைகளால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

கிராமத்திற்குள் புகுந்த யானைகள்

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனூர் வனப்பகுதியில் 7 யானைகள் முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் இந்த யானைகள் மாரச்சந்திரம், நொகனூர் மரக்கட்டா, லக்கச்சந்திரம், கொத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை நொகனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 யானைகள் கொத்தூர் கிராமத்திற்குள் புகுந்தன. வனப்பகுதிக்கு சென்ற கிராம மக்கள் யானைகளை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த யானைகள் கிராமத்தில் உள்ள வீடுகளை ஒட்டி நடந்து சென்றன. இதனால் கிராம மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

விரட்டும் பணி

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் தலைமையிலான வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த யானைகள் அஞ்செட்டி செல்லும் சாலையை கடந்து நொகனூர் காப்புக்காட்டிற்கு சென்றன. அங்கு ஏற்கனவே முகாமிட்டுள்ள 2 யானைகளுடன் சேர்ந்தன. இந்த 7 யானைகளையும் ஜவளகிரி நோக்கி விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.


Next Story