மா மரங்களை சேதப்படுத்திய யானைகள்
வத்திராயிருப்பு அருகே மா மரங்களை யானைகள் சேதப்படுத்தின.
விருதுநகர்
வத்திராயிருப்பு,
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான கான்சாபுரம் அத்தி கோவில் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை, மா, பலா, வாழை, தேக்கு ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் அத்தி கோவில் பகுதியில் கருத்த பாண்டி என்பவருக்கு சொந்தமான தோப்பிற்குள் காட்டு யானைகள் புகுந்து மா மரங்களை வேரோடு பிடுங்கி சேதப்படுத்தி உள்ளது. தென்னை குருத்துகளை மட்டுமே சாப்பிட்டு விட்டு சென்ற யானைகள் சமீப காலமாக மரங்களை வேரோடு பிடுங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக விவசாயிகள் கவலையுடன் கூறினர். ஆதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்கவும், யானைகள் தாக்குதலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story