ஆக்ரோஷ மோதலில் ஈடுபட்ட யானைகள்


தினத்தந்தி 23 May 2023 12:30 AM IST (Updated: 23 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தமிழக-கேரள எல்லை வனப்பகுதியில் ஆக்ரோஷ மோதலில் யானைகள் ஈடுபட்டன. இது தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோயம்புத்தூர்

வால்பாறை

தமிழக-கேரள எல்லை வனப்பகுதியில் ஆக்ரோஷ மோதலில் யானைகள் ஈடுபட்டன. இது தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி

கோவை மாவட்டம் வால்பாறையானது, தமிழக-கேரள எல்லையில் உள்ளது. இங்கு கோவை மட்டுமின்றி வெளிமாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.

வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணிகள், அருகில் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கும் செல்வது வழக்கம். இதேபோன்று அதிரப்பள்ளிக்கு சுற்றுலா வரும் கேரளாவை சேர்ந்த பயணிகளும், வால்பாறைக்கு வந்து செல்வார்கள்.

யானைகள் மோதல்

இந்த நிலையில் நேற்று வால்பாறைக்கு வந்த கேரளாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள், அதிரப்பள்ளி வழியாக திரும்பி சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது வெற்றிலைபாறை வனப்பகுதியில் உள்ள சாலையோரத்தில் நின்ற 2 காட்டுயானைகள் திடீரென ஆக்ரோஷ மோதலில் ஈடுபட்டன. ஒன்றையொன்று துதிக்கையாலும், தந்தத்தாலும் தாக்கிக்கொண்டு பிளிறியது அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகளை உறைய வைப்பதாக இருந்தது.

வீடியோ வைரல்

இதை சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பரப்பினர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வனப்பகுதியில் வாளச்சால் கோட்ட வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story