நெல்வயலில் புகுந்து யானைகள் அட்டகாசம்


நெல்வயலில் புகுந்து யானைகள் அட்டகாசம்
x

தேன்கனிக்கோட்டை அருகே நெல்வயலில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்துள்ளன.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள எஸ்.குருபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தபாபு. விவசாயியான இவர் தோட்டத்தில் நெல் சாகுபடி செய்துள்ளார். தற்போது அறுவடை தயாராக உள்ள நிலையில் நேற்று முன்தினம் இரவு நொகனூர் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வந்த 4 யானைகள் நெல்வயலில் புகுந்து பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் அட்டகாசம் செய்துள்ளன. நேற்று காலை நெல் வயலுக்கு சென்ற விவசாயி யானைகள் பயிர்களை சேதப்படுத்தியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யானைகளால் சேதமடைந்த நெல் பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

1 More update

Next Story