வேப்பனப்பள்ளி அருகே தக்காளி தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்


வேப்பனப்பள்ளி அருகே  தக்காளி தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்
x

வேப்பனப்பள்ளி அருகே தக்காளி தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தன.

கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொங்கனப்பள்ளி மற்றும் எப்ரி சுற்றுவட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் நேற்று முன்தினம் பூதிமுட்லு கிராமத்தில் விவசாயிகள் பயிரிட்டு இருந்த தக்காளி செடிகளை மிதித்து அட்டகாசம் செய்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை காட்டுக்குள் விரட்டினர்.


Next Story