காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் தகவல்


காலியாக உள்ள பணியிடங்களுக்கு  தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்  கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
x

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தகவல் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி


இதுதொடர்பாக கலெக்டர் ஸ்ரீதர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தற்காலிக ஆசிரியர் நியமனம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் 2022-2023-ம் கல்வியாண்டில் கடந்த மாதம் 1-ந் தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதிச்சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்டக்கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான காலிப்பணியிட விவரங்கள் முதன்மைக்கல்வி, மாவட்டக்கல்வி, வட்டாரக்கல்வி அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6-ந்தேதி கடைசிநாள்

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 6-ந்தேதி (புதன்கிழமை) மாலை 5 மணி ஆகும். குறித்த நேரத்திற்குப் பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தகவல் பலகையில் வெளியிடப்படும் காலிப்பணியிட விவரங்கள் மாறுதலுக்குட்பட்டது. மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிப்பவர்கள் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்திற்கு deokki2018@gmail.com, திருக்கோவிலூர் கல்வி மாவட்டத்திற்கு deotkr2018@gmail.com, உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்டத்திற்கு deoupt65@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்கள் அனுப்பலாம்.

இவ்வாறு மேற்கண்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story