தாட்கோ மூலம் அரசின் திட்டங்களை தகுதியானவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுகோள்
தாட்கோ மூலம் அரசின் திட்டங்களை தகுதியானவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
பெரம்பலூர்
தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் அரசின் மகளிர் வேளாண் நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டு திட்டம், ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கான துரித மின் இணைப்பு திட்டம், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கான பொருளாதார நிதி திட்டம் ஆகிய திட்டங்களை தகுதியானவர்கள் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேற்கண்ட திட்டங்களின் கீழ் பயன்பெற சாதி சான்று, வருமான சான்று, குடும்ப அட்டை, ஆதார் கார்டு, இருப்பிட சான்று, ஓட்டுனர் உரிமம் (பேட்ஜ்), விலைப்புள்ளி திட்ட அறிக்கை, புகைப்படம் போன்ற ஆவணங்களை http://appplication.tahdco.com தாட்கோ ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328276317 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story