இமானுவேல் சேகரன் நினைவு தினம்
தேனி பகுதியில், இமானுவேல் சேகரனின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தேனி
தேனி அருகே முத்துதேவன்பட்டியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதாசசி, தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் ரத்தின சபாபதி, தி.க. மாவட்ட செயலாளர் மணிகண்டன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் தர்மர், ஜெய் பீம் புரட்சிப்புலிகள் அமைப்பின் தலைவர் அருந்தமிழரசு உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இமானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் தேனி அல்லிநகரத்தில் தமிழ்ப் புலிகள் கட்சி சார்பில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் நிர்வாகிகள், இமானுவேல் சேகரன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Next Story