கடையநல்லூரில் குளத்திற்குள் பாய்ந்த சிமெண்ட் லாரிகள்...!


கடையநல்லூரில் குளத்திற்குள் பாய்ந்த சிமெண்ட் லாரிகள்...!
x
தினத்தந்தி 11 Jun 2022 9:21 AM GMT (Updated: 2022-06-12T14:01:18+05:30)

கடையநல்லூரில் குளத்தில் விழுந்த 2 சிமெண்ட் லாரிகளால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தென்காசி:

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே ராஜபாளையத்திலிருந்து கேரளாவிற்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் எதிரே போலீசார் வந்த மினி பஸ்சில் மோதியது.

அப்போது சாலையோரம் நின்ற மற்றொரு லாரி மீதும் சிமெண்ட் லாரி பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் இரண்டு லாரிகளும் சாலையோரம் உள்ள அட்டை குளத்திற்குள் பாய்ந்தது. விபத்தில் லாரி டிரைவர்கள் மற்றும் கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதேபோன்று மினி பஸ்சில் இருந்து போலீசாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விபத்து குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story