மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக பணியாற்றிய ரேவதி கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துக்கொண்டார். இவரது தற்கொலைக்கான காரணம் என்ன? அவரது இறப்பின் பின்னணியில் யார் உள்ளனர்? என்பது குறித்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க கோரி இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் சார்பில் புதுக்கோட்டையில் திலகர் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இந்திராணி தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் நிஷா சத்தியன் கோரிக்கைகள் குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தை சோ்ந்த பெண்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கண்டன கோஷங்களை எழுப்பினர்.


Next Story