7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட துணைத்தலைவர் துரைக்கண்ணு, இணைச்செயலாளர் எழில்விஜயன், மாவட்ட மகளிரணி செயலாளர் ராஜம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சட்டச் செயலாளர் சீனிவாசன் வரவேற்றார் .மாவட்ட செயலாளர் மலைச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் வேல்ராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியை தவிர வேறு எந்த பணியும் வழங்கக்கூடாது. முடக்கி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை நிலுவைத்தொகையுடன் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.