தேசிய ஊரக வேலை திட்டத்தில் சிரமங்களை களைந்திட வலியுறுத்தல்


தேசிய ஊரக வேலை திட்டத்தில் சிரமங்களை களைந்திட வலியுறுத்தல்
x

தேசிய ஊரக வேலை திட்டத்தில் சிரமங்களை களைந்திட வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூரில், மாவட்ட தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் பேரவை கூட்டம் மாவட்ட அமைப்பாளர் ராஜாங்கம் தலைமையில் நேற்று நடந்தது. சங்கத்தின் பொதுச்செயலாளரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணை செயலாளருமான பெரியசாமி பேரவை கூட்டத்தை தொடங்கி வைத்து சங்கத்தின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை தொடங்கும் நேரத்தை காலை 9 மணியாக அறிவிக்க வேண்டும். அதில் குறைந்த பட்ச கூலி ரூ.281-ஐ குறைக்காமல் வழங்க வேண்டும். கிராமப்புறங்களில் ஆன்லைன் வருகை பதிவு செய்வதில் பல்வேறு சிரமம் ஏற்படுவதால் இந்த நடைமுறையை கைவிட வேண்டும். வேலை நாட்களை ஆண்டுக்கு 200 நாட்களாக உயர்த்திட வேண்டும். மாதந்தோறும் 5-ந்தேதிக்குள் சம்பளம் வழங்கிட வேண்டும். குடிமனை பட்டா, வீட்டுமனை பட்டா காலம் தாழ்த்தாமல் வழங்கிட வேண்டும். கோவில் நிலங்களில் குடியிருக்கும் விவசாய கூலி தொழிலாளர்களை அப்புறப்படுத்துவதை கைவிட வேண்டும். அவர்கள் குடியிருக்கும் இடத்தை அவர்களுக்கே உரிமையாக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Related Tags :
Next Story