கோரிக்கையை வலியுறுத்திகலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


கோரிக்கையை வலியுறுத்திகலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கையை வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

பெண்கள் மீது தாக்குதல்

தேனிஅருகே உள்ள குள்ளப்புரம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கோவில் பாதை ஒன்று உள்ளது. இதற்கிடையே கடந்த மே மாதம் கோவில் திருவிழா நடந்தது. விழாவையொட்டி அந்த பாதை வழியாக ஊர்வலம் சென்றது.

அப்ேபாது ஊர்வலத்தி்ல் சென்ற பெண்களை ஒரு பிரிவினர் தரக்குறைவாக பேசியதுடன், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் இறந்த மூதாட்டி உடலை அந்த பாதை வழியாக கொண்டு சென்றனர். அப்போது அதே பிரிவினர் இந்த பாதை வழியாக செல்லக்கூடாது என்று தகராறு செய்தனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் பிரச்சினை சுமுகமாக முடிந்தது. இதுபோல் தொடர்ச்சியாக பிரச்சினை நடந்து வருவதால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.

ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் திரண்டு தேனி கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்ேபாது தங்கள் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர்.

பின்னர் பொதுமக்கள் சார்பில் 8 பேர் அலுவலகத்திற்கு சென்று தங்கள் கோரிக்கை குறித்து கலெக்டர் முரளிதரனிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுகொண்ட அவர் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அஙகிருந்து கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story