20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திதொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்


20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திதொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-19T00:16:25+05:30)
தேனி

தேனி பங்களாமேட்டில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜான் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் ராஜன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட பொருளாளர் விஜயராஜ் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 6 மற்றும் 7-வது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். கல்வி நலனுக்கு எதிரானவற்றை தேசிய கல்விக் கொள்கையில் இருந்து நீக்க வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Related Tags :
Next Story