கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் குடோன்களில் சுமைப்பணி தொழிலாளர்கள் மதுபான பெட்டிகளை ஏற்றி இறக்கும் பணியை செய்து வருகின்றனர். சுமைப்பணி தொழிலாளர்களுக்கு இறக்கு, ஏற்று கூலியை உயர்த்தி கொடுக்க வேண்டும். தொழிலாளர்களிடம் பிடிக்கப்பட்ட இ.பி.எப். பணத்தை தொழிலாளர்களுக்கு ஏற்கனவே உள்ள எண்ணில் ஒரே மாதிரியாக செலுத்த வேண்டும்.

விலைவாசி உயர்ந்து உள்ள நிலையில் தொழிலாளர்கள் கூலியில் பிடித்தம் செய்வதை உடனே நிறுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி அருகே ஆ.சங்கம்பாளையத்தில் உள்ள குடோன் முன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதற்கு குடோன் தலைவர் மாயவன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் திருமலைராஜாராம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார். மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணி கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் வெள்ளிங்கிரி நன்றி கூறினார்.


Next Story