கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் பேரணி -கலெக்டரிடம் மனு அளித்தனர்


கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் பேரணி  -கலெக்டரிடம் மனு அளித்தனர்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர்கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர்

மதுரை


தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை தீர்க்கக்கோரி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்தி கலெக்டரிடம் மனு அளிப்பது மற்றும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதபட்சத்தில் தமிழகத்தில் உள்ள 4,400 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் பணியாளர்கள், விற்பனையாளர்கள், குடும்பத்துடன் பேரணி நடத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளிப்பது குறித்து ஏற்கனவே தொழிற்சங்கத்தால் முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் 170 சங்கங்களின் பணியாளர்கள், ரேஷன் கடை விற்பனையாளர்கள் நேற்று மதுரை உலக தமிழ் சங்கத்தின் முன்பிருந்து பேரணியாக வந்தனர். பயிர்க்கடன், நகைக்கடன் மற்றும் மகளிர் சுயஉதவிகுழு கடன் தள்ளுபடி தொகைகளை முழுமையாக வட்டியுடன் சங்கங்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் மதுரை கலெக்டரிடம் மனு அளித்தனர்.

1 More update

Next Story