பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
x

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சியில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சியில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

ஆயுள் காப்பீட்டு கழக (எல்.ஐ.சி.) முகவர்கள் (லியாபி) சங்கத்தின் சார்பில் பொள்ளாச்சி கிளை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், தொடர்ந்து 7 நாட்கள் பகல் 12 மணிமுதல் 1 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்தவும், எல்.ஐ.சி. வாரவிழாவை புறக்கணிக்கவும் முடிவு எடுத்து அறிவித்தனர். பின்னர் பாலிசிதாரர்களுக்கு போனஸ் அதிகப்படுத்த வேண்டும். பாலிசிக்கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்கவேண்டும். முகவர்களுக்கு மருத்துவக் காப்பீடு, குழுக்காப்பீட்டு மற்றும் பணிக்கொடை தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். ஒரே இடத்தில் பாலிசி அச்சடிப்பது, அனுப்புவதை நிறுத்த வேண்டும்.

ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும்

பழைய முறையை பின்பற்ற வேண்டும். முகவர்களுக்கான பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும். பாலிசி பிரிமியத்தில் ஜி.எஸ்.டி. வரியை நீக்கவேண்டும். முகவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும். முகவர்களுக்கு வீட்டுவசதி கடன் 5 சதவீத வட்டியில் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சங்கத்தின் கிளை தலைவர் முத்துச்சாமி, செயலாளர் பாபு, பொருளாளர் கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள், முகவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story