கோவையில் 6¼ கிலோ தங்க நகைகளுடன் ஊழியர் தலைமறைவு


கோவையில் 6¼ கிலோ தங்க நகைகளுடன் ஊழியர் தலைமறைவு
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் 6¼ கிலோ தங்க நகைகளுடன் ஊழியர் தலைமறைவானார்.

கோயம்புத்தூர்

கோவை

கோவை ராஜவீதியை சேர்ந்தவர் சுந்தரராமன் (வயது 55). இவர் அந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக நகை கடை (ஜூவல்லரி) நடத்தி வருகிறார்.

இவர் வெளி மாநிலங்களில் இருந்து ஆர்டர் பெற்று தங்க நகை ஆபரணங்களை தயார் செய்து அதனை விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி ஐதராபாத்தில் உள்ள ஒரு நகைக்கடை கொடுத்த ஆர்டரின் பேரில் ரூ.2½ கோடி மதிப்பிலான 6 கிலோ 273 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை தயார் செய்தார்.

பின்னர் அவரிடம் பணிபுரியும் நடராஜன் (40) என்பவரிடம் அந்த நகைகளை கொடுத்து ஐதராபாத்திற்கு அனுப்பினார். ஆனால் நகைகளுடன் சென்ற நடராஜன் திரும்பி வரவில்லை. அவரை தொடர்பு கொள்ள முயன்றபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் அவர் நகைகளுடன் தலைமறைவானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுந்தரராமன் இதுகுறித்து பெரியகடை வீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ரூ.2½ கோடி நகைகளுடன் தலைமறைவான நடராஜன் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story