தனியார் நிறுவனத்தில் ரூ.20 ஆயிரத்தை திருடிய ஊழியர் கைது


தனியார் நிறுவனத்தில் ரூ.20 ஆயிரத்தை திருடிய ஊழியர் கைது
x

தனியார் நிறுவனத்தில் ரூ.20 ஆயிரத்தை திருடிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

கரூர் பஸ் நிலையம் அருகே உள்ள கோவை ரோட்டில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருபவர் மதன்பாபு (வயது 38). இவர் நிறுவனத்தின் கணக்குகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது கணக்கில் ரூ.20 ஆயிரம் குறைந்துள்ளது. இதனையடுத்து மதன் பாபு தனியார் நிறுவனத்தில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பார்த்தார். அப்போது, அதே நிறுவனத்தில் பில் போடும் பிரிவில் வேலை பார்த்து வரும் சதீஷ் (25) என்பவர் பணப்பெட்டியில் இருந்து ரூ.20 ஆயிரத்தை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து மதன்பாபு கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிந்து, சதீசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story